Monday 26 September 2011

TAMILVANAN AND I



நானும் தமிழ்வாணனும்




        தமிழ்வாணனின் கல்கண்டைப் படித்துத் தமிழில் சரளமாக எழுதுவதற்குக் கற்றவர்களில் நானும் ஒருவன். 
நாங்கள் பள்ளியில் படிக்கும்போது வாங்கிய பத்திரிக்கைகளில் ஒன்று கல்கண்டு.
1957க்கு முன்னாலெல்லாம் அதில் கதைகள், தொடர்கதை, கட்டுரைகள், கேள்வி-பதில் என்று இருக்கும். பிற்காலத்தில் கேள்வி-பதில், தொடர்கதை, வைத்தியம்/தன்முனைப்புத் தூண்டல், 
துணுக்குகள் போன்றவற்றைக் கொண்டு விளங்கியது.
கேள்வி பதில் பகுதிக்கு அந்தப் பேர் போனவர்கள் ஷங்கர்ஸ் வீக்லி பாபுராவ் படேலும், ப்லிட்ஸ் பத்திரிக்கை கராஞ்சியாவும். அப்போது குஷ்வந்த் சிங் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.
கராஞ்சியா, பாபுராவ் படேலுடன் வரிசைப் படுத்தப் பட்டவர் தமிழ்வாணன்.
இதில் என்ன வேடிக்கை என்றால் என்னுடைய தந்தையார் கல்கண்டை வாங்கி வைத்துக்கொண்டு படித்ததுதான். அவர் இறக்கும்வரை - எழுபத்திரண்டாம் வயது வரைக்கும் வாங்கினார். 
அதில் உள்ள துணுக்குகளை ஒரு தனி நோட்புக்கில் மெனக்கெட்டு எழுதிவைத்துக் கொண்டிருந்தார். 
இப்போதும் அவருடைய நினைவு நாளில் அந்த நோட்புக்கை அவருடைய படத்தின் முன் வைத்து வழிபடுகிறோம்.
நானும் என் தந்தையாரும் சென்னைக்குச் சென்று தமிழ்வாணனைச் சந்தித்தோம். 
அப்போது பல பிரச்னைகளால் மனநிம்மதியை இழந்திருந்தேன். 
தமிழ்வாணனிடம் அவற்றைப் பற்றியும் மனதில் உள்ள கிலேசங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன். 
அவற்றைப் பற்றிச் சொல்லச் சொல்ல அவற்றிற்கெல்லாம் தீர்வை என் தந்தையார் சொல்லிக்கொண்டு வந்தார்.
சற்று நேரத்தில் தமிழ்வாணன், "இப்படிப்பட்ட அப்பாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு என்னிடம் போய் கேட்கிறீர்களே. மனக்கவலைக்கு மருந்தெல்லாம் நம்மிடமே இருக்கிறது. அதை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துக்கொள்வதுதான்  ஒவ்வொருவரின் கெட்டிக்காரத்தனம்" என்றார்.
அடிக்கடி சத்தம் போட்டு சிரித்தார். 
தமிழ்வாணன் கொடுத்த தெம்பு சிறிதுகாலம் இருந்தது.
மொட்டையாக இருந்தார். அவரை மொட்டைத்தலையராகப் பார்க்கும் போது மனச் சந்தோஷமாக இருந்தது. 
இன்னொரு மொட்டை மண்டையனையும் சென்னையில் அதே ஆண்டில் பார்த்தேன். 
புருவத்தைக்கூட சிரைத்து வைத்துக்கொண்டிருந்த மொட்டையன். தமிழினத் துரோகி. அவனையெல்லாம் பார்த்தது குறித்து வெட்கப் படுகிறேன். 
அந்த மொட்டையனால் ஏதும் உதவியும் இல்லை.
ஈழத்தில் ஏற்பட்ட தமிழினப் பின்னடைவு குறித்து பாதாம் அல்வாவை குலோப் ஜாமூனில் பிசைந்து சாப்பிட்டிருப்பான், அந்த ஆள். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$